ஒரு காது குத்து விழா பத்திரிகை வந்துச்சுங்க. எப்படியும் எட்டு பக்கம் இருக்கும். பக்கத்து வீட்டுக்காங்க பேரெல்லாம் போட்டிருந்தாங்க. மாமன், மச்சான், என உறவு முறைகளில் போட முடியாத பேர்களை வரவேற்பாளர்கள் லிஸ்டில் சேர்த்திருந்தாங்க. எதற்க்கு என்று கேட்டால் "மொய் வர வேண்டும் என்பதற்காக" என்று கூறினார்.
இன்னும் கிராமப்புறங்களில் காணப்படும் விசித்திர நடைமுறைகளில் ஒன்று மொய்.
நாங்கள் வைத்தோம் நீங்கள் வைத்தே ஆகவேண்டும் என்னும் மொய் முறைகள் இன்னும் கிராமத்தில் வேரூன்றி இருக்கிறது. வைக்காதவர்களை ஒலிபெருக்கியில் அழைத்து வைக்க சொல்வதும், வைத்ததை ஒலிபெருக்கியில் சொல்வதும், இன்னும் வேடிக்கை
உங்களுக்கு தெரியாது திருப்பூர் குமரனின் சொந்த ஊர் திருப்பூர் கிடையாது.
அவர் தமது பெற்றோர்களுடன் இருந்த முதலில் இருந்த ஊர்: காங்கேயம்.

ஒரே நேரத்தில் அவர் செல்ல வேண்டிய திருமணங்கள் எட்டு.
ஒரு திருமணத்திற்கு 1 ரூபாய் வீதம் என்று எட்டு திருமணத்திற்க்கும் வைக்க வேண்டிய மொய்ப்பணமும் எட்டு. இவரின் திருமணத்திற்கு அவர்கள் வைத்த 1 ரூபாயை திருப்பி வைக்க வேண்டும். முடியாத அளவுக்கு ஏழ்மை, எவரிடமும் கடன் பெற முடியாத நிலையும் கூட.
இரவோடு இரவாக அவமானம் தாங்காமல் காங்கேயத்திலிருந்து வீட்டை காலி செய்து கொண்டு திருப்பூர் வந்து அதே நெசவுத்தொழிலை செய்து வாழ்வு நடத்தி வந்தவரை தேசியப் பணியும், காங்கிரஸ் சத்தியாக் கிரகமும், சுதந்திர வேட்கையும் ஈர்க்க நாட்டிற்கு களப்பணியாகி சரித்திரமானார்.
ஒருவிதத்தில் மொய் வாங்குவதும், கடன்காரர்களாக மாறுவதும் ஒன்று தான்
No comments:
Post a Comment