Monday, 27 May 2013

திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

காற்றுக்கு எத்தனை பெயர்கள்!



தமிழர்கள் காற்றினை வகைபடுத்திய விதம். திசை மற்றும் வேகம் போன்றவற்றை கொண்டு காற்றின் வகைகள்.

(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:

(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று


















(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:

(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
(௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று





எங்கு எதை
தொலைத்ததோ
தெரியவில்லை ?!..

யார் கண்ணுக்கும்
தெரியாமல்
எதையோ தேடி
தினமும் திரிகிறது!..
காற்று!..

Wednesday, 22 May 2013

பேஸ்புக் பாதுகாப்பு


உங்கள் பேஸ்புக் தளம் பாதுகாப்பானதாக அமைய சில வழிகள்


நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில
சந்தர்ப்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை
ஏற்படுகின்றதல்லவா?அவ்வாறு பயன்படுத்திய பின் அதனை Log out செய்ய மறந்து
விட்டால் அல்லது திடீர் என்று துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது facebook
பக்கத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும்
அல்லவா…..?
இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்யலாம் …….

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணணி மூலம் உங்கள் facebook கணக்கினுள்
நுழையுங்கள். பின் Account Settings ——> Security எனும் பகுதிக்கு
செல்லுங்கள். அங்கு Active Sessions என்பதற்கு அருகில் Edit என்பதனை
சுட்டுங்கள்.

இனி நீங்கள் எந்த திகதியில், எங்கிருந்து, எதன் மூலம் உங்கள் facebook
Account இணை பயன்படுத்தினீர்கள் என்பதனை பட்டியலிட்டுக் காட்டும். அதில்
நீங்கள் Log out செய்ய மறந்து விட்ட Sessions கண்டு End Activity என்பதனை
சுட்டுங்கள். அவ்வளவுதான்.

Friday, 17 May 2013

உலகில் முதன் முதலில் அமைக்கப்பட்ட விளம்பர வடிவ அமைப்பு - 1900


அரசியலை பற்றி உண்மையை சொன்ன எம் ஜி ஆர்

1977-ல்
M.G.R.முதலமைச்சர் ஆன அன்று அவரது இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது 
மாலை போட வந்த , கவிஞர். நா. காமராசனிடம் மக்கள் திலகம் எம்.ஜி ஆர் . 
சொன்னது...

தம்பி, பார்த்தாயா நான் பதவிக்கு வரவேண்டும் என்று 
பாடு பட்ட தொண்டர்கள் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். ஆனால் 
தங்களுக்குப் பதவி வேண்டும் என்று கேட்க வந்தவர்கள் எல்லாம் , என் 
வீட்டிற்குள், எனக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள். இதுதான் அரசியல்...!

Friday, 3 May 2013

சமையல் பொருட்கள்: அளவுகள் - அட்டவணை


திரவ அளவுகள்:

1 டீஸ்பூன் 5 மில்லி லிட்டர்

1
 டேபிள் ஸ்பூன் 3 டீஸ்பூன்

1
 கப் 16 டேபிள் ஸ்பூன்

1
 கப் பால் 250 மில்லி லிட்டர்

திட அளவுகள்:

1
 கப் மிளகு - 100 கிராம்

1
 கப் மாவு 125 கிராம்

1
 கப் வெண்ணை 250 கிராம்

1
 கப் அரிசி - 250 கிராம்

1
 கப் பிரெட் தூள்கள் - 60 கிராம்

1
 டீஸ்பூன் சர்க்கரை
5
 கிராம்

1
 டேபிள் ஸ்பூன் கடுகு
10
 கிராம்

1
 டேபிள் ஸ்பூன் மாவு
8
 கிராம்

1
 டேபிள் ஸ்பூன் உப்பு
15
 கிராம்



உலர்ந்த பொருட்களை அளவெடுத்தல்:

3
 டீஸ்பூன்கள்
1
 டேபிள் ஸ்பூன்

1
/2 அவுன்ஸ்
14.3
 கிராம்கள்

2
 டேபிள் ஸ்பூன்கள்
1
/8 கப்

1
 அவுன்ஸ்
28.3
 கிராம்கள்

4
 டேபிள் ஸ்பூன்கள்
ஙு கப்

2
 அவுன்ஸ்கள்
56.7
 கிராம்கள்

5 1
/3 டேபிள் ஸ்பூன்கள்
1
/3 கப்

2.6
 அவுன்ஸ்கள்
75.6
 கிராம்கள்

8
 டேபிள் ஸ்பூன்கள்
1
/4 கப்

4
 அவுன்ஸ்கள்
113.4
 கிராம்கள்

12
 டேபிள் ஸ்பூன்கள்
1
¾ கப்

6
 அவுன்ஸ்கள்
.375
 பவுண்ட்

32
 டேபிள் ஸ்பூன்கள்
2
 கப்கள்

16
 அவுன்ஸ்கள்
1
 பவுண்ட்

64
 டேபிள் ஸ்பூன்கள்
4
 கப்கள்

32
 அவுன்ஸ்கள்
2
 பவுண்ட்கள்

சில பொதுவான விரிவாக்கங்கள்:

tsp. (t) டீஸ்பூன்

Tbs. (T) டேபிள் ஸ்பூன்

C கப்

Oz அவுன்ஸ்

Pt பிண்ட்

Lb பவுண்ட்

Qt குவார்ட்



நிகரான அளவுகள்:

1-1
/2 டீஸ்பூன்
1
/4 டேபிள் ஸ்பூன்

3
 டீஸ்பூன்
1
 டேபிள் ஸ்பூன்

1
/6 கப்
2
 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்

1
/4 கப்
4
 டேபிள் ஸ்பூன்

1
/3 கப்
5
 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்

3
/8 கப்
6
 டேபிள் ஸ்பூன்

1
/2 கப்
8
 டேபிள் ஸ்பூன்

2
/3 கப்
10
 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்

3
/4 கப்
12
 டேபிள் ஸ்பூன்

1
 கப்
16
 டேபிள் ஸ்பூன்

சில பொதுவான அமெரிக்கன் கேன் அளவுகள்:

அளவு எண் எடை கப்கள் நபர்கள் எண்ணிக்கை:

¼ 4 oz ½ 1

3
/8 6 oz ¾ 1

¼ 8 oz 1 2

211
 12 oz 1 ½ 3 - 4

300
 13 1/2 oz 1 3/4-2 3 - 4

303
 15 1/2 oz 2 4

2
 20 oz 2 ½ 5

2
 ¼ 28 1/2 oz 3 ½ 7

3
 33 1/2 oz 4 ¼ 8

5
 56 oz 7 14

10
 103 1/2 oz 13 25



விரைவான அளவுகள்:

3
 டீஸ்பூன்கள் = 1 டேபிள் ஸ்பூன்

2
 டேபிள் ஸ்பூன்கள் = 1 அவுன்ஸ்

4
 டேபிள் ஸ்பூன்கள் = 1/4 கப் = 2 அவுன்ஸ்கள்

6
 டேபிள் ஸ்பூன்கள் = 3/4 கப்

5 1
/8 டேபிள் ஸ்பூன்கள் = 1/3 கப்

8
 டேபிள் ஸ்பூன்கள் = 1/2 கப்

16
 டேபிள் ஸ்பூன்கள் = 1 கப்

1
 கப் = 8 அவுன்ஸ்